ஆல் நியூ கியா செல்டோஸ் கார் பிரசன்னா கியாவில் அறிமுகம் !!
ஆல் நியூ கியா செல்டோஸ் கார் பிரசன்னா கியாவில் அறிமுகம்
கோவை ஜன
கோவையில் ஆல் நியூ கியா செல்டோஸ் கார் பிரசன்னா கியாவில் அறிமுகம்,நவீன வசதிகளுடன் கூடிய உள்கட்டமைப்பு, வாடிக்கையாளர் களை மையமாகக் கொண்ட அணுகு முறையுடனும் செயல்படும், இந்தியாவின் முன்னணி 10 கியா டீலர்களில் ஒன்றான பிரசன்னா கியா நிறுவனம், கோயம்புத்தூரில் ஆல்-நியூ கியா செல்டோஸ் காரை பெருமையுடன் அறிமுகப்படுத்தியது,
கோயம்புத்தூர் - திருச்சி சாலை, அவினாசி சாலை,பொள்ளாச்சி, ஊட்டி, திருப்பூர், அவினாசி, ஈரோடு, கரூர் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட கொங்கு மண்டல பகுதிகளுக்கு முழுமையான சேவையினை வழங்கி வரும் பிரசன்னா கியா நிறுவனம், கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்டோ மொபைல் துறையில் தனக்கென்று தனி முத்திரை பதித்துள்ளது, வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை அடிப்படையா கக் கொண்டு,நுகர்வோரால் அதிகம் நம்பப்படும் ரீடெய்ல் வணிக நிறுவனம் என்ற விருதையும் பெற்றுள்ளது,
கம்பீரமான வடிவமைப்பு,நவீன தொழில் நுட்பம் மற்றும் இந்த பிரிவு கார்களில் முன்னணி பாதுகாப்பு அம்சங்களுடன், பிரீமியம்எஸ் யூ வி கார்கள் பிரிவில் புதிய அத்தியாயத் தை உருவாக்கி உள்ளது,ஆல்-நியூ கியா செல்டோஸ். சிறப்பான டிரைவிங் அனுபவத்தை வழங்கும் வகையில் சொகுசான பயணம் மற்றும் புதுமைகள் ஆகியவற்றின் சிறந்த கலவையாக திகழ்கிறது,
ஆல் நியூ கியா செல்டோஸ் சக்தி வாய்ந்த மற்றும் எரிபொருள் சிக்கனமான என்ஜின் வகைகளில் கிடைக்கிறது, 1.5 லிட்டர் டீசல் என்ஜின் - மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் வகைகளில் கிடைக்கிறது, பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய இரண்டு வகைகளும் பட்ஜெட்டில் சிறப்பான மதிப்பை வழங்குவதால், புதிய கியா செல்டோஸ் அதன் பிரிவில் மிகவும் கவர்ச்சிகரமான தேர்வுகளில் ஒன்றாகத் திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment