கோவையில் ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி மனை திட்டம் அறிமுகம்
கோவை நவ
இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுமனைத் திட்ட மேம்பாட்டு நிறுவனமாக முன்னணி வகிக்கும் ஜி ஸ்கொயர் கோவையில் தனது புதிய முதன்மை திட்டமான ஜி ஸ்கொயர்- தி ரெசிடென்சி என்ற திட்டத்தை அறிவித்துள்ளது,ஜி ஸ்கொயரின் நிறுவனரும், நிர்வாக இயக்குனருமான பாலா ராமஜயம் ஜி ஸ்கொயர் - தி ரெசிடென்சி’ குறித்து கூறுகையில் சுமார் 16.3 ஏக்கர் பரப்பளவில்,ரூபாய்.750 கோடி மதிப்பிலான இந்த ஆடம்பர சொகுசு மனைத்திட்டம், வர்த்தக மற்றும் குடியிருப்பு தேவைகளுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது,
கோவை மக்கள் எல்லோராலும் அதிகம் விரும்பப்படும்,மிக முக்கிய இடமாகக் கருதப்படும் ஜி.வி ரெசிடென்சிக்கு நேர் எதிரே இத்திட்டம் அமைந்துள்ளது,மேலும், கோவையில் மிக வேகமாக வளர்ந்து வரும் பீளமேடு குடியிருப்புப் பகுதிக்கு மிக அருகில் உள்ள ராஜீவ் காந்தி நகருக்கு அடுத்து அமைந்துள்ளதால், நகரின் மையப்பகுதியில் தங்களது கனவு இல்லங்களையோ அல்லது வர்த்தக கட்டிடங்களையோ கட்ட விரும்பும் மக்களின் முதல் தேர்வாக முக்கியத் துவம் பெறும் திட்டமாக ஜி ஸ்கொயர் - தி ரெசிடென்சி அமைந்துள்ளது,
கோவை மாநகரின் ப்ரீமியம் நில மதிப்பை மறுவரையறை செய்யும் வகையில்,ஜி ஸ்கொயர் இந்தத் திட்டத்தை மிகச்சிறந்த விலையில் அறிமுகப்படுத்தியுள்ளது,ஜி ஸ்கொயர் - தி ரெசிடென்சி’ திட்டத்தின் அறிமுகச் சலுகையாக, தற்போதைய சந்தை விலையை விட 30%-க்கும் குறைவாக, ஒரு சென்ட் ரூபாய்.39.9 லட்சம் என நிர்ணயித்துள்ளது,வர்த்தக மற்றும் குடியிருப்பு ஆகிய இரண்டு விதமான பயன்பாட்டிற்கும் ஏற்ற ஏற்ற வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் இத்திட்டம் கோவை மாநகரின் பெரும் மதிப்புமிக்க ரேஸ் கோர்ஸ் பகுதியிலிருந்து சில நிமிடத் தொலைவில் அமைந்துள்ளது, மேலும் ஆடம்பரம் மற்றும் சொகுசு அம்சங்களைக் கொண்டிருக்கும் வர்த்தக மற்றும் குடியிருப்பு மனைத்திட்டமாக அறிமுகமாகியுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment