கொடிசியாவில் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா




கொடிசியாவில் கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா 


கோவை டிச 

கொடிசியா கோயம்புத்தூர் ஷாப்பிங் திருவிழா,வரும் 24ம் தேதி துவங்கி 9 நாட்கள் நடக்கிறது,இதுதொடர்பாக கொடிசியா தலைவர் கார்த்திகேயன்,செயலாளர் யுவராஜ்,ஷாப்பிங் திருவிழா தலைவர் நந்தகோபால், துணைத்தலைவர் வரதராஜன், ஆகியோர் கூட்டாக தெரிவிக்கையில் 11வது ஆண்டாக ஷாப்பிங் திருவிழா நடக்கிறது, கடந்த ஆண்டை விட கூடுதல் ஸ்டால்கள் அமைகின்றன, தினமும் மாலை 6:30 மணி முதல் சின்னத் திரை பிரபலங்கள் பங்கேற்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெறுகின்றன,

வீட்டு உபயோக பொருட்கள், ஸ்டேசனரி,தங்க,வைர நகைகள், இயற்கை உணவுகள், காலணிகள்,ஓவியங்கள்,ஜவுளி ஆடை வகைகள், பேஷன் உபகரணங்கள்,சமையல றை பொருட்கள்,புத்தகங்கள்,உடற் பயிற்சி சாதனங்கள் என,நுகர் வோருக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் வாங்கும் அளவுக்கு, 9 மாநிலங்களி ல் இருந்து 500 ஸ்டால்கள் அமைகின்றன,

மேலும் பர்னிச்சருக்கு என பிரத்யேக அரங்கு காதி கிராமத் தொழில் ஆணையத்தின் 50 அரங்குகள்,மத்திய ஜவுளித் துறையின் கைவினை பொருட்கள் 20 அரங்களில் உணவுப் பிரியர்களுக் காக 12 ஸ்டால்கள் அமைகின்றன, இம்முறை குழந்தைகளோடு, பெரியவர்களும் விளையாடி மகிழும் வகையில்,வாட்டர் கேம்ஸ்,டேபிள் கேம்ஸ்,கார் னிவல் கேம்ஸ், ஒட்டக சவாரி, சிமுலேட்டர்கள், ரோபோடிக் பறவைகள், கோஸ்ட் ஹவுஸ், மலர் கண்காட்சி உட்பட 50 வகையான விளையாட்டுகள் உள்ளன,

திருவிழாவின் உணர்வைப் பிரதிபலிக்கும் வகையில்,ஒளி அலங்காரம் இடம்பெறுகிறது, செல்பி பாய்ன்ட்டில் படம் எடுத்து மகிழலாம், காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை பார்வையாளர்கள் அனுமதிக்கப் படுவர்கள்,கோவை மக்களுக்கு சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை தரும்,கூடவே பொழுது போக்கு அம்சங்களையும் அனுபவித்து மகிழலாம் என்றார்கள்.





Comments

Popular posts from this blog

கோவையில் ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி மனை திட்டம் அறிமுகம்

JOS ALUKKAS OPENS NEW FLAGSHIP SHOWROOM IN COIMBATORE

Rathinam College of Arts & Science Celebrates 21st Graduation Day !!