BUILD INTEC 2024 !! கோவை கொடிசியாவில் மாபெரும் பில்டு இன்டக் கண்காட்சி 2024 !!
கோவையில் மாபெரும் பில்டு இன்டக் கண்காட்சி 2024 !!
கோவை பிப்ரவரி
கோவையில் கட்டிடம் மற்றும் கட்டுமான பொருட்கள் தொடர்பான பில்டு இன்டெக் 2024 கண்காட்சி கோவை கொடிசியா வணிக வளாகத்தில் வரும் 9ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெற உள்ளது ,
இதுகுறித்து நடந்த செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டத்தில் கண்காட்சி தலைவர் சிவக்குமார் கூறியதாவது கோவையில் 13வது பில்டு இண்டெக் கண்காட்சியை கோவை மாவட்ட ஆட்சியாளர் கிராந்தி குமார் துவங்கி வைக்கிறார், நான்கு நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் 200க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள் பங்கேற்கின்றன, 260 க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் அமைக்கப்படுகின்றன,
இந்தியா முழுவதும் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பங்கேற்க உள்ள இந்த கண்காட்சியில் கட்டிடம் மற்றும் கட்டுமானம் சார்ந்த தொழில்கள் தொடர்பான ஏராளமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்ட வைக்கப்பட உள்ளன, புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு இந்த கண்காட்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றார், கொடிசியா தலைவர் திருஞானம் மற்றும் கொடிசியா நிர்வாகிகள் மற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் உடனிருந்தனர் .
Comments
Post a Comment